• Sep 11 2025

மனைவிக்கு கொலுசு போட்டு விட்டு அழகு பார்த்த முதியவர்; இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா? வைரலாகும் காணொளி!

shanuja / Sep 10th 2025, 4:35 pm
image

முதியவரான கணவன் தனது மனைவிக்கு கொலுசு போட்டு விட்டு அழகு பார்க்கும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. 


முதியவர்களான கணவன் மனைவி ரயிலில் பயணம் செய்துள்ளனர். இருக்கையில் பயணம் செய்து கொண்டிருக்கையிலே கணவரான முதியவர் தனது மனைவிக்கு கொலுசு போட்டு விட்டுள்ளார். 


மனைவியின் காலைத் தூக்கி வைத்திருந்து முதியவர் கொலுசு போட்டு விட்ட காட்சியை அருகிலிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். 



அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. காணொளியைப் பார்த்த பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா? என்று வியந்து பார்க்கும் அளவிற்கு முதியவர்களின் செயல் அமைந்துள்ளது. 


காதலுக்கு வயதில்லை என்பதையும் தன்னுடைய மனைவி மீது அவர் கொண்ட காதலையும் கொலுசு போட்டு விட்டு வெளிப்படுத்தியுள்ளார். 


ஓடும் ரயிலில் பதிவான இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பார்ப்பவர்களைக் கவர்ந்து வியக்க வைத்துள்ளது.

மனைவிக்கு கொலுசு போட்டு விட்டு அழகு பார்த்த முதியவர்; இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா வைரலாகும் காணொளி முதியவரான கணவன் தனது மனைவிக்கு கொலுசு போட்டு விட்டு அழகு பார்க்கும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. முதியவர்களான கணவன் மனைவி ரயிலில் பயணம் செய்துள்ளனர். இருக்கையில் பயணம் செய்து கொண்டிருக்கையிலே கணவரான முதியவர் தனது மனைவிக்கு கொலுசு போட்டு விட்டுள்ளார். மனைவியின் காலைத் தூக்கி வைத்திருந்து முதியவர் கொலுசு போட்டு விட்ட காட்சியை அருகிலிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. காணொளியைப் பார்த்த பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு முதியவர்களின் செயல் அமைந்துள்ளது. காதலுக்கு வயதில்லை என்பதையும் தன்னுடைய மனைவி மீது அவர் கொண்ட காதலையும் கொலுசு போட்டு விட்டு வெளிப்படுத்தியுள்ளார். ஓடும் ரயிலில் பதிவான இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பார்ப்பவர்களைக் கவர்ந்து வியக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement