• May 21 2024

கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..! samugammedia

Chithra / May 14th 2023, 10:28 am
image

Advertisement

காடுகளை அண்மித்த பகுதிகளில் முகாம்களை அமைப்பதற்கு பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பான சுற்றுலா தலமொன்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கொஸ்லந்த, தியலும பிரதேசத்தை பார்வையிடச் சென்று இளம் தம்பதிகள் கூடாரம் அமைந்து தங்கியிருந்தவேளை காட்டு யானை தாக்கியதில் பெண் மரணமடைந்த சம்பவம் தொடர்பாகவே சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முகாம்களை பராமரித்தல் உட்பட சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை வழங்கும் அனைத்து இடங்களையும் பதிவு செய்வது அவசியமானது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் அதிகாரசபை அவர்களின் ஒழுங்குமுறையில் தலையிட்டு அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க முடியும் எனவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை. samugammedia காடுகளை அண்மித்த பகுதிகளில் முகாம்களை அமைப்பதற்கு பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன் பாதுகாப்பான சுற்றுலா தலமொன்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கொஸ்லந்த, தியலும பிரதேசத்தை பார்வையிடச் சென்று இளம் தம்பதிகள் கூடாரம் அமைந்து தங்கியிருந்தவேளை காட்டு யானை தாக்கியதில் பெண் மரணமடைந்த சம்பவம் தொடர்பாகவே சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்திருந்தார்.உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முகாம்களை பராமரித்தல் உட்பட சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை வழங்கும் அனைத்து இடங்களையும் பதிவு செய்வது அவசியமானது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் அதிகாரசபை அவர்களின் ஒழுங்குமுறையில் தலையிட்டு அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க முடியும் எனவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement