• Sep 20 2024

இலங்கையில் முதல் முறையாக அறிமுகமான கோப அறை! SamugamMedia

Chithra / Mar 17th 2023, 10:40 am
image

Advertisement

 இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டின் முதலாவது ஆத்திர அறை என்ற 'ரேஜ் ரூம்' பத்தரமுல்லை கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது.


ஒரு ஆத்திர அறையின் கருத்து நவீன நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும்.

எனினும், ஆத்திர அறையின் யோசனை இலங்கை சமூகத்திற்கு இன்னும் புதியது.


ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த ஒரு வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வழியை வழங்குகின்றன.

தனிநபர்கள், தங்கள் நண்பர்களுடன் வந்து, ஒரு பொருட்களை தேர்ந்தெடுத்து பொருட்களை அடித்து நொறுக்கலாம் என்று ரேஜ் ரூமின் ஸ்தாபகரான ஷவீன் பெரேரா கூறியுள்ளார்.


அங்கு வரும் ஒவ்வொருவரும் தமது மன அழுத்தத்தை முறியடித்து, புதியவராக வெளியேறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆத்திர அறைகள் வன்முறையைத் தூண்டுகின்றன என்ற தவறான கருத்து ஒரு பொய்யானதாகும்.


இலங்கை மிகவும் பின்தங்கிய சிந்தனையில் உள்ளமையே இதற்கான காரணமாகும் என்றும் ஷவீன் பெரேரா தெரிவித்துள்ளார்.


இலங்கையில் முதல் முறையாக அறிமுகமான கோப அறை SamugamMedia  இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டின் முதலாவது ஆத்திர அறை என்ற 'ரேஜ் ரூம்' பத்தரமுல்லை கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது.ஒரு ஆத்திர அறையின் கருத்து நவீன நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும்.எனினும், ஆத்திர அறையின் யோசனை இலங்கை சமூகத்திற்கு இன்னும் புதியது.ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த ஒரு வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வழியை வழங்குகின்றன.தனிநபர்கள், தங்கள் நண்பர்களுடன் வந்து, ஒரு பொருட்களை தேர்ந்தெடுத்து பொருட்களை அடித்து நொறுக்கலாம் என்று ரேஜ் ரூமின் ஸ்தாபகரான ஷவீன் பெரேரா கூறியுள்ளார்.அங்கு வரும் ஒவ்வொருவரும் தமது மன அழுத்தத்தை முறியடித்து, புதியவராக வெளியேறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆத்திர அறைகள் வன்முறையைத் தூண்டுகின்றன என்ற தவறான கருத்து ஒரு பொய்யானதாகும்.இலங்கை மிகவும் பின்தங்கிய சிந்தனையில் உள்ளமையே இதற்கான காரணமாகும் என்றும் ஷவீன் பெரேரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement