• Sep 22 2026

2026 க.பொ.த. உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

Chithra / Sep 21st 2026, 12:35 pm
image

 

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு உரிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.


செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள், நேரங்கள் மற்றும் ஏனைய அறிவுறுத்தல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பரீட்சார்த்திகள் தங்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி, உரிய திகதிகளில் செயன்முறைப் பரீட்சைகளுக்கு தோற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2026 க.பொ.த. உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு  2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு உரிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள், நேரங்கள் மற்றும் ஏனைய அறிவுறுத்தல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பரீட்சார்த்திகள் தங்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி, உரிய திகதிகளில் செயன்முறைப் பரீட்சைகளுக்கு தோற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement