• Mar 01 2025

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Feb 28th 2025, 3:59 pm
image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை(2024/2025) எதிர்வரும் பங்குனி மாதம் 17 ஆம் திகதி தொடங்கி 26  ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டைகள்  கிடைக்காதவர்கள் பங்குனி மாதம் 7ஆம் திகதிக்கு முன்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாடம், மொழி மற்றும் பெயரில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், மார்ச் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைனில் செய்ய வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை(2024/2025) எதிர்வரும் பங்குனி மாதம் 17 ஆம் திகதி தொடங்கி 26  ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அனுமதி அட்டைகள்  கிடைக்காதவர்கள் பங்குனி மாதம் 7ஆம் திகதிக்கு முன்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும், பாடம், மொழி மற்றும் பெயரில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், மார்ச் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைனில் செய்ய வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement