• Jul 02 2025

லாஃப்ஸ் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Jul 1st 2025, 11:02 am
image

 

லாஃப் சமையல் எரிவாயுவின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலை திருத்தத்தின்படி,

12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவாலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது. 

அந்த விலையுயர்வின் அடிப்படையில்,  12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபா எனவும் 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, மே, ஜூன் மாதங்களில் லாஃப் எரிவாயு விலைகள் மாற்றப்படவில்லை. 

இந்நிலையில், இந்த மாதமும் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லாஃப்ஸ் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு  லாஃப் சமையல் எரிவாயுவின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலை திருத்தத்தின்படி,12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவாலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது. அந்த விலையுயர்வின் அடிப்படையில்,  12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபா எனவும் 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அதனையடுத்து, மே, ஜூன் மாதங்களில் லாஃப் எரிவாயு விலைகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மாதமும் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement