• May 21 2024

இன்று மற்றொரு பேருந்து விபத்து: 20 பயணிகள் காயம்!

Chithra / Jan 21st 2023, 4:31 pm
image

Advertisement

பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

மடோல்கெலே ஊடாக பன்வில நோக்கிச் சென்ற போதே, குறித்த பேருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் பயணித்த 16 பெண்களும் 4 ஆண்களும் காயமடைந்து மடோல்கெலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 07 பெண்களும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா – ஹட்டன் வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற மூன்று வாகனங்கள் தொடர்புடைய விபத்தில், வேனில் பயணித்த 6 பேரும், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மற்றொரு பேருந்து விபத்து: 20 பயணிகள் காயம் பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.மடோல்கெலே ஊடாக பன்வில நோக்கிச் சென்ற போதே, குறித்த பேருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் பயணித்த 16 பெண்களும் 4 ஆண்களும் காயமடைந்து மடோல்கெலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 07 பெண்களும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.நுவரெலியா – ஹட்டன் வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற மூன்று வாகனங்கள் தொடர்புடைய விபத்தில், வேனில் பயணித்த 6 பேரும், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement