• Sep 19 2024

எரிவாயுவின் விலையில் மீண்டும் மாற்றம்? நள்ளிரவு முதல் அமுலுக்கு

Sharmi / Jun 1st 2024, 3:11 pm
image

Advertisement

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை  இன்று (01) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடையவுள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் ஆகும்.

இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


எரிவாயுவின் விலையில் மீண்டும் மாற்றம் நள்ளிரவு முதல் அமுலுக்கு நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை  இன்று (01) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடையவுள்ளது.மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் ஆகும்.இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement