• May 04 2024

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!

Tamil nila / Apr 11th 2024, 9:39 pm
image

Advertisement

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந் நாட்டின் பொருளாதாரம் 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக குறித்த வௌியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டிய நிலையில், நெருக்கடி நிலைமை மற்றும் பணவீக்கம் இப்போது ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் வௌிநாட்டு பணவனுப்பல்கள் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடினமான சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் வகையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பு. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இந் நாட்டின் பொருளாதாரம் 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக குறித்த வௌியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டிய நிலையில், நெருக்கடி நிலைமை மற்றும் பணவீக்கம் இப்போது ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் வௌிநாட்டு பணவனுப்பல்கள் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கடினமான சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் வகையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement