• May 25 2025

கனடாவில் தமிழின அழிப்புக்கான மீண்டுமொரு நினைவுத்தூபி - நிறைவேற்ற தீர்மானம்

Thansita / May 24th 2025, 12:35 pm
image

கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்

மேலும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கனடாவில் ஸ்காப்ரோவில் மற்றும் ஒரு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழின அழிப்புக்கான மீண்டுமொரு நினைவுத்தூபி - நிறைவேற்ற தீர்மானம் கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்மேலும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், கனடாவில் ஸ்காப்ரோவில் மற்றும் ஒரு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement