• May 19 2024

நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாதோருக்கு மற்றுமொரு வாய்ப்பு..! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Jun 5th 2023, 7:13 am
image

Advertisement

அதிபர் தரம் மூன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாத 500க்கும் அதிகமானோருக்கான மாற்றுத் திகதி கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தரம் மூன்றுக்கான ஆட்சேர்ப்புக்காக, அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 6 ஆயிரத்து 300 பேருக்கான நேர்முகத் தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை நடத்தப்பட்டது.

குறித்த காலப்பகுதியில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கடமைப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் அவர்களுக்கான மாற்று தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சில் இடம்பெறும்

இது தொடர்பான அறிவிப்பு மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்வி பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாதோருக்கு மற்றுமொரு வாய்ப்பு. கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு samugammedia அதிபர் தரம் மூன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாத 500க்கும் அதிகமானோருக்கான மாற்றுத் திகதி கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதிபர் தரம் மூன்றுக்கான ஆட்சேர்ப்புக்காக, அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 6 ஆயிரத்து 300 பேருக்கான நேர்முகத் தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை நடத்தப்பட்டது.குறித்த காலப்பகுதியில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கடமைப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்தநிலையில் அவர்களுக்கான மாற்று தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.அதன்படி, அவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சில் இடம்பெறும்இது தொடர்பான அறிவிப்பு மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்வி பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement