• May 18 2024

நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது-விஜயதாச கருத்து..!samugammedia

Sharmi / Apr 12th 2023, 9:14 am
image

Advertisement

நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க   பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனம், மதம்,கட்சி, வேறுபாடுகள் இருக்கும் வரை நாம் வளர்ந்த நாடாக மாற முடியாது.தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் 8 மாதங்களுக்குள் பொருளாதார ஆய்வாளர்களும் மக்களும் எதிர்பார்க்காத வகையில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது என  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார் சிலாவத்துறை கொண்டச்சி  சிங்கள விஜய கம்மான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை  (11) காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு திட்டத்தினால் கொண்டச்சி, காயக்குழி, மறிச்சுக்கட்டி மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளில் வசிக்கும்   சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

 மக்களுக்கு குடிநீர் வசதி உள்ளது.சிலாவத்துறை,வில்பத்து, விஜயதிலக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண பிரதம நீதியரசர் சங்கநாயக்க, மகாவிளச்சி அதி வணக்கத்துக்குரிய விமலநாயக்க தேரர், நீதியமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய,இதற்காக ரூ.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

 பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்படி, இங்குள்ள நீர் சுத்திகரிப்புக்கு,  பிறகு குடிப்பதற்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டு அதன்படி இந்த நீர் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு சிங்களக் கிராமம் சிங்கள விஜய கம்மான என்பதுடன் கிராமத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி இங்கு வாழ்கின்றனர்.

பொறுப்பான தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாத குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள் நாட்டில் இன்னும் பல இருப்பதாகவும், அந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு . சிங்களத் தமிழர் மற்றும் கிராமத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கி பாராட்டப்பட வேண்டும்.

கட்சிகள், நிறங்கள், மதங்கள், சின்னங்கள் என தற்போது உள்ள பிளவுகளால் மக்கள் மத்தியில் பிளவுகள் நிலவும் வரையில் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவது இலகுவான காரியம்  இல்லை.

பாதுகாப்பான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்ட நிபந்தனைகளை க் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் தடைச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கு எதிராக சிலர் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த 4 ஆண்டுகளில் ஈஸ்டர் தாக்குதல், தொற்று நோய், நிலைமைகள் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில், எட்டு மாத குறுகிய காலத்தில், நாடு அனைத்து வழிகளிலும் முன்னேறியுள்ளது. பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்ததை விடவும் உள்ளது என்றும் அமைச்சர் நினைவூட்டினார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவே ஒவ்வொருவரும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிக்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நீதி அமைச்சரின் தனிப்பட்ட நன்கொடையுடன் சிஹல விஜயகம பிரதேசத்தில் வசிக்கும் 55 சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கப்பட்டதுடன்,கொண்டச்சி கிராம சேவையாளர் பிரிவில்  24 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், முசலி பிரதேசச் செயலாளர் உள்ளடங்களாக அரச அதிகாரிகள்,பிரதேச சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.


நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது-விஜயதாச கருத்து.samugammedia நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க   பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனம், மதம்,கட்சி, வேறுபாடுகள் இருக்கும் வரை நாம் வளர்ந்த நாடாக மாற முடியாது.தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் 8 மாதங்களுக்குள் பொருளாதார ஆய்வாளர்களும் மக்களும் எதிர்பார்க்காத வகையில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது என  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.மன்னார் சிலாவத்துறை கொண்டச்சி  சிங்கள விஜய கம்மான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை  (11) காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு திட்டத்தினால் கொண்டச்சி, காயக்குழி, மறிச்சுக்கட்டி மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளில் வசிக்கும்   சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் பயனடைவார்கள். மக்களுக்கு குடிநீர் வசதி உள்ளது.சிலாவத்துறை,வில்பத்து, விஜயதிலக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண பிரதம நீதியரசர் சங்கநாயக்க, மகாவிளச்சி அதி வணக்கத்துக்குரிய விமலநாயக்க தேரர், நீதியமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய,இதற்காக ரூ.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்படி, இங்குள்ள நீர் சுத்திகரிப்புக்கு,  பிறகு குடிப்பதற்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டு அதன்படி இந்த நீர் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு சிங்களக் கிராமம் சிங்கள விஜய கம்மான என்பதுடன் கிராமத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி இங்கு வாழ்கின்றனர்.பொறுப்பான தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாத குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள் நாட்டில் இன்னும் பல இருப்பதாகவும், அந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு . சிங்களத் தமிழர் மற்றும் கிராமத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கி பாராட்டப்பட வேண்டும்.கட்சிகள், நிறங்கள், மதங்கள், சின்னங்கள் என தற்போது உள்ள பிளவுகளால் மக்கள் மத்தியில் பிளவுகள் நிலவும் வரையில் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவது இலகுவான காரியம்  இல்லை.பாதுகாப்பான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்ட நிபந்தனைகளை க் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் தடைச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கு எதிராக சிலர் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கடந்த 4 ஆண்டுகளில் ஈஸ்டர் தாக்குதல், தொற்று நோய், நிலைமைகள் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில், எட்டு மாத குறுகிய காலத்தில், நாடு அனைத்து வழிகளிலும் முன்னேறியுள்ளது. பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்ததை விடவும் உள்ளது என்றும் அமைச்சர் நினைவூட்டினார்.இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவே ஒவ்வொருவரும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிக்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.மேலும் நீதி அமைச்சரின் தனிப்பட்ட நன்கொடையுடன் சிஹல விஜயகம பிரதேசத்தில் வசிக்கும் 55 சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கப்பட்டதுடன்,கொண்டச்சி கிராம சேவையாளர் பிரிவில்  24 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், முசலி பிரதேசச் செயலாளர் உள்ளடங்களாக அரச அதிகாரிகள்,பிரதேச சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement