• May 11 2024

புத்தாண்டையொட்டி இன்று முதல் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள்! samugammedia

Bus
Chithra / Apr 12th 2023, 9:20 am
image

Advertisement

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச. பஸ்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 பஸ்களை இன்று முதல் சேர்த்துள்ளது இலங்கை போக்குவரத்து சபை.

இந்த விசேட போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இயங்கும் என்றும், புத்தாண்டு தினத்தன்று பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார். 

இதையடுத்து புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

300க்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

இதேவேளை, 13ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்திலும் மேலதிக பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் பண்டுக சவர்ணஹன்ச தெரிவித்தார்.

புத்தாண்டையொட்டி இன்று முதல் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் samugammedia தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச. பஸ்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 பஸ்களை இன்று முதல் சேர்த்துள்ளது இலங்கை போக்குவரத்து சபை.இந்த விசேட போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இயங்கும் என்றும், புத்தாண்டு தினத்தன்று பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார். இதையடுத்து புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.300க்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.இதேவேளை, 13ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.புத்தாண்டு காலத்திலும் மேலதிக பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் பண்டுக சவர்ணஹன்ச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement