• Jan 13 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Jan 7th 2025, 7:15 am
image


புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் டிஜிட்டல் வசதியை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.

நேற்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாக, புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் டிஜிட்டல் வசதி  ஆரம்பிக்கப்பட்டது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் இணையத்தளம் அமைச்சர் விஜித ஹேரத்தினால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த முன்னோடித் திட்டம் 07 தூதரகங்கள் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. 


இதன்படி, ஜப்பான், கத்தார், மிலன், ரொறன்ரோ, மெல்பேர்ன், டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள குவைத் தூதரகங்களில் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி 

பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்குக் கிடைக்கும். 

எதிர்காலத்தில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் டிஜிட்டல் வசதியை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.நேற்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாக, புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் டிஜிட்டல் வசதி  ஆரம்பிக்கப்பட்டது.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் இணையத்தளம் அமைச்சர் விஜித ஹேரத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த முன்னோடித் திட்டம் 07 தூதரகங்கள் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஜப்பான், கத்தார், மிலன், ரொறன்ரோ, மெல்பேர்ன், டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள குவைத் தூதரகங்களில் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்குக் கிடைக்கும். எதிர்காலத்தில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 

Advertisement

Advertisement

Advertisement