• May 13 2024

மக்கள் ஒன்றுத்திரண்டு வீதிக்கு இறங்கினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் - அநுர பிரியதர்சன யாப்பா எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 2nd 2023, 10:26 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா குற்றம் சுமத்தியுள்ளார்.


நாட்டு மக்கள் ஒன்றுத்திரண்டு வீதிக்கு இறங்கினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

சபாநாயகருக்கும், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன உறுப்பினர்களுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்று ரணில் குறிப்பிடுவது எவ்விதத்தில் நியாயமாகும்.

ஜனாதிபதியின் நிலைப்பாட்டின் பிரகாரம் இல்லாத உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் ரூபாவை திறைச்சேரி ஏன் ஒதுக்க வேண்டும்.


தனது தேவைக்கு ஏற்ப ஜனநாயகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது என்பதை சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம்.


நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,ஆகவே பாராளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்றத்தை நாடியுள்ளது.


திறைசேரியின் செயலாளரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் வினவினால் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தையே குறிப்பிடுவார்.

மக்கள் ஒன்றுத்திரண்டு வீதிக்கு இறங்கினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் - அநுர பிரியதர்சன யாப்பா எச்சரிக்கை SamugamMedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா குற்றம் சுமத்தியுள்ளார்.நாட்டு மக்கள் ஒன்றுத்திரண்டு வீதிக்கு இறங்கினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.சபாநாயகருக்கும், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன உறுப்பினர்களுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்று ரணில் குறிப்பிடுவது எவ்விதத்தில் நியாயமாகும்.ஜனாதிபதியின் நிலைப்பாட்டின் பிரகாரம் இல்லாத உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் ரூபாவை திறைச்சேரி ஏன் ஒதுக்க வேண்டும்.தனது தேவைக்கு ஏற்ப ஜனநாயகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது என்பதை சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம்.நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,ஆகவே பாராளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்றத்தை நாடியுள்ளது.திறைசேரியின் செயலாளரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் வினவினால் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தையே குறிப்பிடுவார்.

Advertisement

Advertisement

Advertisement