• Jan 23 2025

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர அநுர திட்டம் - 65 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jan 22nd 2025, 11:03 am
image

 

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான 65 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு குழு சிறைச்சாலைகளுக்குள் இருந்து குற்றச்செயல்களை வழி நடத்தி வருவதாகவும்,

அவ்வாறான குற்றவாளிகளை ஒரு இடத்தில் தடுத்து வைத்து, குற்றச்செயல்கள் மேற்கொள்ள முடியாத வகையில் கட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எமது இராணுவம் மரியாதையான முறையில் கௌரவமாக தங்களது பணியை மேற்கொள்கின்றனர்.

எனினும் இலட்சக்கணக்கான இராணுவ படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சிலர் சேவையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில குற்றவாளிகள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு பேணியமை தெரிய வந்துள்ளது.

எனவே, பொலிஸ் திணைக்களத்திற்காக புதிய கட்டமைபொன்று உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர அநுர திட்டம் - 65 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை  பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான 65 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மற்றுமொரு குழு சிறைச்சாலைகளுக்குள் இருந்து குற்றச்செயல்களை வழி நடத்தி வருவதாகவும்,அவ்வாறான குற்றவாளிகளை ஒரு இடத்தில் தடுத்து வைத்து, குற்றச்செயல்கள் மேற்கொள்ள முடியாத வகையில் கட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.எமது இராணுவம் மரியாதையான முறையில் கௌரவமாக தங்களது பணியை மேற்கொள்கின்றனர்.எனினும் இலட்சக்கணக்கான இராணுவ படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சிலர் சேவையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.சில குற்றவாளிகள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு பேணியமை தெரிய வந்துள்ளது.எனவே, பொலிஸ் திணைக்களத்திற்காக புதிய கட்டமைபொன்று உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement