விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்குகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அநுதாரபுரத்தில் நேற்று கிராமத்துக்கு கிராமம் மக்கள் சந்திப்பை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து வேறு எந்த திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
மாறாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைத்து அரச இல்லங்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்குகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள்.
ஆனால் இதுவரையில் மஹிந்த ராஜபக்ஷவை அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தியோகபூர்வமான கடிதத்தை அனுப்பவில்லை.
முடிந்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பை எழுத்துமூலமாக விடுக்க வேண்டும் என்ற சவாலை அரசாங்கத்திடம் முன்வைக்கிறேன் என்றார்.
புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்த மஹிந்தவை பழிவாங்கும் அநுர - சாகர குற்றச்சாட்டு விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்குகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அநுதாரபுரத்தில் நேற்று கிராமத்துக்கு கிராமம் மக்கள் சந்திப்பை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து வேறு எந்த திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைத்து அரச இல்லங்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்குகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள். ஆனால் இதுவரையில் மஹிந்த ராஜபக்ஷவை அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தியோகபூர்வமான கடிதத்தை அனுப்பவில்லை. முடிந்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பை எழுத்துமூலமாக விடுக்க வேண்டும் என்ற சவாலை அரசாங்கத்திடம் முன்வைக்கிறேன் என்றார்.