அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் அனைத்து பிக்கு மாணவர்களுக்கும் இன்று(11) நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சில பிக்கு மாணவர்கள் கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி பூட்டு. அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் அனைத்து பிக்கு மாணவர்களுக்கும் இன்று(11) நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சில பிக்கு மாணவர்கள் கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.