• May 11 2024

மூடப்படும் அபாயத்தில் ஆப்பிள் நிறுவனம்!

Chithra / Dec 10th 2022, 5:49 pm
image

Advertisement

உலகளாவிய கொவிட் தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராததால் உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. 

இது குறித்து எச்சரிக்கும் சர்வதேச வணிகச் செய்திச் சேவைகள், பல தொழிலாளர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், உலகின் மிகப் பெரிய ஆப்பிள் ஐபோன் (ஐபோன்) உற்பத்தித் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.

இதன் காரணமாக, 2022 நவம்பர் மாதத்திற்கான ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆண்டை விட 11.4% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொவிட் தொற்றுநோய் தொடர்பான உலகளாவிய கவனம் மெதுவாக குறைந்து வருகிறது என்றாலும், தொற்றுநோய் தொழிற்சாலையை அதிகம் பாதித்த காலம் நவம்பர் 2022 ஆகும். ஆப்பிளின் அனைத்து சமீபத்திய தயாரிப்புகளும் இந்த தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான யுபிஎஸ், ஆப்பிளின் சமீபத்திய ஃபோன், ‘ஐபோன்-14 தலைமுறை’ விற்பனை, முன்னர் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 16 மில்லியன் யூனிட்கள் குறையக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையால் தைவான் நிறுவனத்தின் வர்த்தகம் 2.4 சதவீதம் சரிந்துள்ளது. மேலும், வரும் கிறிஸ்துமஸ் சீசனில் உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்ற மொபைல் போன் மாடல்களுக்கு வேகமாக மாறி வருகின்றனர்.

மூடப்படும் அபாயத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய கொவிட் தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராததால் உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இது குறித்து எச்சரிக்கும் சர்வதேச வணிகச் செய்திச் சேவைகள், பல தொழிலாளர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், உலகின் மிகப் பெரிய ஆப்பிள் ஐபோன் (ஐபோன்) உற்பத்தித் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.இதன் காரணமாக, 2022 நவம்பர் மாதத்திற்கான ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆண்டை விட 11.4% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுநோய் தொடர்பான உலகளாவிய கவனம் மெதுவாக குறைந்து வருகிறது என்றாலும், தொற்றுநோய் தொழிற்சாலையை அதிகம் பாதித்த காலம் நவம்பர் 2022 ஆகும். ஆப்பிளின் அனைத்து சமீபத்திய தயாரிப்புகளும் இந்த தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன.சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான யுபிஎஸ், ஆப்பிளின் சமீபத்திய ஃபோன், ‘ஐபோன்-14 தலைமுறை’ விற்பனை, முன்னர் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 16 மில்லியன் யூனிட்கள் குறையக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையால் தைவான் நிறுவனத்தின் வர்த்தகம் 2.4 சதவீதம் சரிந்துள்ளது. மேலும், வரும் கிறிஸ்துமஸ் சீசனில் உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்ற மொபைல் போன் மாடல்களுக்கு வேகமாக மாறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement