• Nov 25 2024

படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா? யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

Sharmi / Jul 16th 2024, 3:42 pm
image

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று(16) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தேங்காய் உடைத்து  குறித்த  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

“பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததற்கு கூலி தொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று(16) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.தேங்காய் உடைத்து  குறித்த  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.“பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, படிப்பிற்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததற்கு கூலி தொழிலா கடைசி வரைக்கும், படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா, படித்தும் பரதேசிகளாக திரிவதா” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement