• May 17 2024

இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறதா? - அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Nov 26th 2023, 9:25 am
image

Advertisement

 

தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்படட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்  என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின்படி நாம் ஒரு அணிசேரா நாடு. இஸ்ரேல்-காசா யுத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். இதற்காக ஐ.நா.வில் கூட நாம் குரல் கொடுத்துள்ளோம்.

இலங்கையிலிருந்து அரேபிய நாடுகளுக்கு பலர் வேலை வாய்ப்புகளுக்கு செல்கின்றனர். அதேவேளை ஏதாவது ஒரு நாடு எம்மிடம் தமது நாட்டுக்கான தொழிலாளர்களை கேட்கும்போது நாம் இன, மத ரீதியாக செயற்பட முடியாது.

இஸ்ரேல் - காசா யுத்தம் ஆரம்பித்த போது தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தொழிலாளர்களை அங்கு அனுப்புவதை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தோம்.

தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்பட்ட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.

எனவே இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பக்கூடாது என இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் இன, மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என குறிப்பிட்டார்.  

இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறதா - அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia  தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்படட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்  என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின்படி நாம் ஒரு அணிசேரா நாடு. இஸ்ரேல்-காசா யுத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். இதற்காக ஐ.நா.வில் கூட நாம் குரல் கொடுத்துள்ளோம்.இலங்கையிலிருந்து அரேபிய நாடுகளுக்கு பலர் வேலை வாய்ப்புகளுக்கு செல்கின்றனர். அதேவேளை ஏதாவது ஒரு நாடு எம்மிடம் தமது நாட்டுக்கான தொழிலாளர்களை கேட்கும்போது நாம் இன, மத ரீதியாக செயற்பட முடியாது.இஸ்ரேல் - காசா யுத்தம் ஆரம்பித்த போது தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தொழிலாளர்களை அங்கு அனுப்புவதை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தோம்.தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்பட்ட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.எனவே இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பக்கூடாது என இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் இன, மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என குறிப்பிட்டார்.  

Advertisement

Advertisement

Advertisement