• May 19 2024

இனவாத அரசுடன் ஒட்டியுள்ள புல்லுருவிகள் - யார் அந்த புல்லுருவி – அமைச்சர் மனுசவா? சுமந்திரன் பதில் samugammedia

Chithra / Apr 25th 2023, 4:46 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச இயந்திரம் இனப் பாகுபாடு காட்டியவாறு தொடர்ச்சியாக இனவாத நோக்கோடு செயற்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கூட இந்த அரசாங்கத்தின் இனவாத முகம் பளிச்சென்று தென்பட்டிருந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இருந்து ஏதாவது ஒரு கேள்வியை சபையில் முன்வைத்தால் உடனடியாக பயங்கரவாதி என முன்வரிசை அமைச்சர் கூட உச்சரிப்பதை அவதானிக்க முடிந்ததாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் இனவாத முகத்தை பகிரங்கமாக காட்டுகின்ற இந்த அரசாங்கத்துடன் சில புல்லுருவிகள் ஒட்டிக்கொண்டு இருப்பதாகவும் இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் இவ்வாறான புல்லுருவிகளை இனங்காணமுடியும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை வடக்கு கிழக்கில் காணிகளை அபகரிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.


இனவாத அரசுடன் ஒட்டியுள்ள புல்லுருவிகள் - யார் அந்த புல்லுருவி – அமைச்சர் மனுசவா சுமந்திரன் பதில் samugammedia ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச இயந்திரம் இனப் பாகுபாடு காட்டியவாறு தொடர்ச்சியாக இனவாத நோக்கோடு செயற்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கூட இந்த அரசாங்கத்தின் இனவாத முகம் பளிச்சென்று தென்பட்டிருந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு கிழக்கில் இருந்து ஏதாவது ஒரு கேள்வியை சபையில் முன்வைத்தால் உடனடியாக பயங்கரவாதி என முன்வரிசை அமைச்சர் கூட உச்சரிப்பதை அவதானிக்க முடிந்ததாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.அத்துடன் இனவாத முகத்தை பகிரங்கமாக காட்டுகின்ற இந்த அரசாங்கத்துடன் சில புல்லுருவிகள் ஒட்டிக்கொண்டு இருப்பதாகவும் இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் இவ்வாறான புல்லுருவிகளை இனங்காணமுடியும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.இதேவேளை வடக்கு கிழக்கில் காணிகளை அபகரிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement