• Jul 10 2025

செம்மணி எலும்புக்கூடுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றதா? - ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும்!

shanuja / Jul 9th 2025, 1:42 pm
image

செம்மணி மனிதப் புதை குழியில் கண்டறியப்படும் எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதை ஐ.நா சபை 46/1 தீர்மானத்தின்  ஆணையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில் மேலும் உள்ளதாவது,  


செம்மணி சித்துப்பாத்தி மயான மனிதப் புதை குழிகள் இன்று சகல மட்டங்களிலும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. இதுவரை 40 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 34 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் இதற்குள் அடங்கும். சிறுவர்களின் புத்தகப்பை, பொம்மை, காப்புகள் என்பவனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 


அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற கட்டுக்காவல் மூலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழக தடவியல் மருத்துவத்துறையின் மானிடவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை, விளையாட்டு பொம்மை, காப்புகள் போன்ற சான்றுப் பொருட்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. செய்மதிப் படங்கள் மூலம் மேலும் பல புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


அரசாங்கம் நிர்ப்பந்தம் காரணமாக புதைகுழி அகழ்வுக்கு  அனுமதியயளித்துள்ளது. நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக ஐ.நா மனித உரிமைளாளர் ஆணையாளர் புதைகுழிகளை பார்வையிட்டமையும் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தங்களை கொடுத்துள்ளது. ஐ.நா  மனித உரிமையாளரின் பிரசன்னம் விவகாரத்திற்கு சர்வதேச பரிணாமத்தை வழங்கியுள்ளது. அரசாங்கம் ஆணையாளரின் செம்மணியில் பிரசன்னத்தை விரும்பியிருக்கவில்லை. அதற்கான அனுமதியையும் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பு சட்டத்தரணிகளே அதனைப் பெற்றுக் கொடுத்தனர்.


மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம் இல்லாமல் வெறுமனே நீதிமன்ற நடவடிக்கையாயின் அரசாங்கம் விவகாரத்தை எங்காவது மூடி மறைக்கப் பார்த்திருக்கும் அல்லது கிடப்பில் போட்டிருக்கும். சர்வதேசப் பரிணாமம் உள்ளதால் இதனை மூடி மறைக்கவோ, கிடப்பில் போடவோ முடியாது. மனிதப் புதை குழிகளை அரசாங்கம் தானாகவே முயற்சி எடுத்து தேடிக் கண்டுபிடிக்கவில்லை. தற்செயல் நிகழ்ச்சிகளாகவே அவை கண்டுபிடிக்கப்பட்டன. 


தற்போதைய செம்மணி புதைகுழி தகனமேடை அமைப்பதற்காக தோண்டிய போது கண்டுபிடிக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வர புதை குழிகளும் தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டன. தீவுப்பகுதி உட்பட வேறும் பல பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன அங்கும் அகழ்வு முயற்சிகள் இடம்பெறல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீPதரன் கோரிக்கை விடுத்த போதும் நீதி அமைச்சர் அதனை தட்டிக் கழித்தார்.


இப்புதைகுழிகள் இராணுவத்தினருடையதாக இருக்கலாம், விடுதலை இயக்கங்களின் உட்கொலை சார்பானதாக இருக்கலாம் என திசை திருப்பல் கதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தினால் தென்னிலங்கை அரசியல் களம் சற்று ஆடிப் போயுள்ளது என கூறலாம். இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய சான்றுகளாக இவை இருக்கின்றன என்பதுதான் தென்னிலங்கையின் பதட்டத்திற்கு காரணமாகும். இந்த கொலைகள்  இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமல்ல. இலங்கை அரசின் தீர்மானமேயாகும். இராணுவத்தினர் இங்கு வெறும் கருவிகள் மட்டும் தான். இன அழிப்பு நோக்கத்தின் ஒரு பகுதியே இக்கொலைகளாகும்.- என்றுள்ளது.

செம்மணி எலும்புக்கூடுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றதா - ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும் செம்மணி மனிதப் புதை குழியில் கண்டறியப்படும் எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதை ஐ.நா சபை 46/1 தீர்மானத்தின்  ஆணையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில் மேலும் உள்ளதாவது,  செம்மணி சித்துப்பாத்தி மயான மனிதப் புதை குழிகள் இன்று சகல மட்டங்களிலும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. இதுவரை 40 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 34 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் இதற்குள் அடங்கும். சிறுவர்களின் புத்தகப்பை, பொம்மை, காப்புகள் என்பவனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற கட்டுக்காவல் மூலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழக தடவியல் மருத்துவத்துறையின் மானிடவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை, விளையாட்டு பொம்மை, காப்புகள் போன்ற சான்றுப் பொருட்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. செய்மதிப் படங்கள் மூலம் மேலும் பல புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அரசாங்கம் நிர்ப்பந்தம் காரணமாக புதைகுழி அகழ்வுக்கு  அனுமதியயளித்துள்ளது. நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக ஐ.நா மனித உரிமைளாளர் ஆணையாளர் புதைகுழிகளை பார்வையிட்டமையும் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தங்களை கொடுத்துள்ளது. ஐ.நா  மனித உரிமையாளரின் பிரசன்னம் விவகாரத்திற்கு சர்வதேச பரிணாமத்தை வழங்கியுள்ளது. அரசாங்கம் ஆணையாளரின் செம்மணியில் பிரசன்னத்தை விரும்பியிருக்கவில்லை. அதற்கான அனுமதியையும் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பு சட்டத்தரணிகளே அதனைப் பெற்றுக் கொடுத்தனர்.மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம் இல்லாமல் வெறுமனே நீதிமன்ற நடவடிக்கையாயின் அரசாங்கம் விவகாரத்தை எங்காவது மூடி மறைக்கப் பார்த்திருக்கும் அல்லது கிடப்பில் போட்டிருக்கும். சர்வதேசப் பரிணாமம் உள்ளதால் இதனை மூடி மறைக்கவோ, கிடப்பில் போடவோ முடியாது. மனிதப் புதை குழிகளை அரசாங்கம் தானாகவே முயற்சி எடுத்து தேடிக் கண்டுபிடிக்கவில்லை. தற்செயல் நிகழ்ச்சிகளாகவே அவை கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய செம்மணி புதைகுழி தகனமேடை அமைப்பதற்காக தோண்டிய போது கண்டுபிடிக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வர புதை குழிகளும் தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டன. தீவுப்பகுதி உட்பட வேறும் பல பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன அங்கும் அகழ்வு முயற்சிகள் இடம்பெறல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீPதரன் கோரிக்கை விடுத்த போதும் நீதி அமைச்சர் அதனை தட்டிக் கழித்தார்.இப்புதைகுழிகள் இராணுவத்தினருடையதாக இருக்கலாம், விடுதலை இயக்கங்களின் உட்கொலை சார்பானதாக இருக்கலாம் என திசை திருப்பல் கதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தினால் தென்னிலங்கை அரசியல் களம் சற்று ஆடிப் போயுள்ளது என கூறலாம். இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய சான்றுகளாக இவை இருக்கின்றன என்பதுதான் தென்னிலங்கையின் பதட்டத்திற்கு காரணமாகும். இந்த கொலைகள்  இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமல்ல. இலங்கை அரசின் தீர்மானமேயாகும். இராணுவத்தினர் இங்கு வெறும் கருவிகள் மட்டும் தான். இன அழிப்பு நோக்கத்தின் ஒரு பகுதியே இக்கொலைகளாகும்.- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement