• May 10 2024

வடக்கில் அத்துமீறும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சியா..? கடற்படை அதிகாரி விளக்கம் samugammedia

Chithra / May 31st 2023, 11:23 am
image

Advertisement

வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த  முயற்சிக்கவில்லை என வடமாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது கடற்படை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்

ஒரு சில படகுகளில்  இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதாவது கட்டுப்படுத்துவதற்குரிய பூரணமான வளங்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக ஆளணி உபகரணங்கள் எங்களிடம் இல்லை.எனவே அதனை ஒரு ராஜதந்திர முறையில் கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.

நமது கடற்பிரதேசமானது பெரிய பிரதேசம். அந்த பிரதேசம் முழுவதிலும் கடற்படை செயற்படுகின்றது. எம்மால் முயன்றவரை நாங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துகின்றோம்.


குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் 12 ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளோம். அதேபோல் போதைப்பொருள் விநியோகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.

இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த நாங்கள் இன்று வரை முயற்சிக்கவில்லை.  மனிதாபிமானமாக செயற்படுகின்றோம்.

மீன்பிடி தொழிலாளர்களாகவே பார்க்கின்றோம். எனவே கடற்கடை தேசிய பாதுகாப்பினை செயல்படுத்தவில்லை என கருத வேண்டாம்.- என்றார்.


வடக்கில் அத்துமீறும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சியா. கடற்படை அதிகாரி விளக்கம் samugammedia வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த  முயற்சிக்கவில்லை என வடமாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது கடற்படை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்ஒரு சில படகுகளில்  இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.அதாவது கட்டுப்படுத்துவதற்குரிய பூரணமான வளங்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக ஆளணி உபகரணங்கள் எங்களிடம் இல்லை.எனவே அதனை ஒரு ராஜதந்திர முறையில் கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.நமது கடற்பிரதேசமானது பெரிய பிரதேசம். அந்த பிரதேசம் முழுவதிலும் கடற்படை செயற்படுகின்றது. எம்மால் முயன்றவரை நாங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துகின்றோம்.குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் 12 ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளோம். அதேபோல் போதைப்பொருள் விநியோகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த நாங்கள் இன்று வரை முயற்சிக்கவில்லை.  மனிதாபிமானமாக செயற்படுகின்றோம்.மீன்பிடி தொழிலாளர்களாகவே பார்க்கின்றோம். எனவே கடற்கடை தேசிய பாதுகாப்பினை செயல்படுத்தவில்லை என கருத வேண்டாம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement