யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில், வெள்ள அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கொடிகாமம் பிரதேச மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சென்று இன்று(01) பார்வையிட்டதோடு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
தென்மராட்சி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 20 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்காமல், வெள்ளத்தில் மத்தியில் வீடுகளிலேயே தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வழங்கி வைத்தார்.
கொடிகாமம் பிரதேசத்திலுள்ள நாவலடி, ஐயனார் கோவிலடி மற்றும் ஆத்தியடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 பேருக்கு 5000 ரூபா பெறுமதியான இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கினார் அர்ச்சுனா யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில், வெள்ள அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கொடிகாமம் பிரதேச மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சென்று இன்று(01) பார்வையிட்டதோடு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.தென்மராட்சி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 20 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்காமல், வெள்ளத்தில் மத்தியில் வீடுகளிலேயே தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வழங்கி வைத்தார்.கொடிகாமம் பிரதேசத்திலுள்ள நாவலடி, ஐயனார் கோவிலடி மற்றும் ஆத்தியடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 பேருக்கு 5000 ரூபா பெறுமதியான இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.