நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அனுராதபுரம் - கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.
வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக பொலிஸார் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து குறித்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் நீதிமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி: நகர்த்தல் பத்திரம் தாக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.அனுராதபுரம் - கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக பொலிஸார் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து குறித்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்படி, பிற்பகல் 1.30க்கு வழக்கை விசாரிக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.