• Jan 23 2025

நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் - உடனடித் தீர்வை கோரும் அர்ச்சுனா எம்.பி!

Chithra / Jan 8th 2025, 1:34 pm
image

 நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று இரண்டாவது முறையாகவும் சபையில் தெரிவித்தார்.

நேற்றைய தினமும் இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். 

சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

இதனிடையே இன்றைய தினமும் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் 

தமக்கு நேரம் வழங்குவது தொடர்பில் குழு ஒன்றை நியமித்து கலந்துரையாடப்படும் என சபாநாயகர் நேற்றைய தினம் உறுதியளித்ததை இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நினைவுபடுத்தியிருந்தார். 

ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் போதும் தாம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து இருக்கையில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டு மீண்டும் சென்று விடுவதாக தெரிவித்திருந்தார். 

எனவே தாம் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தினார். 

தயவு செய்து இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு விரைவாக பதில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். 

இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,

இந்த பிரச்சினை தொடர்பில் நிச்சயமாக சபாநாயகர் தமது கருத்தைத் தெரிவிப்பார் எனவும் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார்

நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் - உடனடித் தீர்வை கோரும் அர்ச்சுனா எம்.பி  நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று இரண்டாவது முறையாகவும் சபையில் தெரிவித்தார்.நேற்றைய தினமும் இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே இன்றைய தினமும் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் தமக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் தமக்கு நேரம் வழங்குவது தொடர்பில் குழு ஒன்றை நியமித்து கலந்துரையாடப்படும் என சபாநாயகர் நேற்றைய தினம் உறுதியளித்ததை இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நினைவுபடுத்தியிருந்தார். ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் போதும் தாம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து இருக்கையில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டு மீண்டும் சென்று விடுவதாக தெரிவித்திருந்தார். எனவே தாம் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தினார். தயவு செய்து இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு விரைவாக பதில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,இந்த பிரச்சினை தொடர்பில் நிச்சயமாக சபாநாயகர் தமது கருத்தைத் தெரிவிப்பார் எனவும் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement

Buy Now