அமெரிக்கா விதித்த 30 வீத வரியால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை விவாதிக்கும் என திறைசேரியின் அதிகாரிகள்த் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இச் செயற்பாட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரி வருமான இலக்குகளை நாடு அடைய முடியாமல் போகலாம்.
எனவே, இந்த சூழ்நிலையின் விளைவுகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலிருந்து சுமார் 40 வீத ஆடைகள் அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுவதால், ஆடைத் துறைக்குச் சலுகைகளைப் பெறுவது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில் மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் மற்றும் உயர்மட்ட வர்த்தக பங்காளிகளுடன் பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்தே இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை, ஜப்பான், தென் கொரியா, கனடா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: வருமான இழப்பை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கை அமெரிக்கா விதித்த 30 வீத வரியால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை விவாதிக்கும் என திறைசேரியின் அதிகாரிகள்த் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இச் செயற்பாட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரி வருமான இலக்குகளை நாடு அடைய முடியாமல் போகலாம். எனவே, இந்த சூழ்நிலையின் விளைவுகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கையிலிருந்து சுமார் 40 வீத ஆடைகள் அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுவதால், ஆடைத் துறைக்குச் சலுகைகளைப் பெறுவது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை.இந்நிலையில் மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் மற்றும் உயர்மட்ட வர்த்தக பங்காளிகளுடன் பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்தே இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை, ஜப்பான், தென் கொரியா, கனடா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.