இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்தே இந்தியா வரலாற்று காலம் முதல் பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய பிரதமர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் இதுவரையில் பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் ஒப்பந்தங்களை இரகசியமாக பேண வேண்டும்.
இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம். என்றார்.
இந்தியாவுடனான ஒப்பந்தங்களை உடன் வெளிப்படுத்தாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் - விமல் வீரவன்ச எச்சரிக்கை இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்தே இந்தியா வரலாற்று காலம் முதல் பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.இந்திய பிரதமர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.இந்த ஒப்பந்தங்கள் இதுவரையில் பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் ஒப்பந்தங்களை இரகசியமாக பேண வேண்டும். இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம். என்றார்.