வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில் கொண்டு செல்லும்போது வேன் சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அப்பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.
மற்றும் திருடப்பட்ட சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
நடராஜரை கடத்திய இராணுவ வீரர். தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில் கொண்டு செல்லும்போது வேன் சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அப்பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார். மற்றும் திருடப்பட்ட சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.