• Nov 23 2024

மட்டக்களப்பில் புதிதாக ஓர் காணியை இராணுவம் தன்வசப்படுத்த திட்டம்! சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்

Chithra / Dec 12th 2023, 1:12 pm
image


 

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி, அதில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனை  நீங்கள் துரிதப்படுத்தி தரவேண்டும்.

அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம். 

அதேபோல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அவ் ஊர் மக்கள் மலசல கூடம் அமைப்பதற்காக கேட்கின்றார்கள்.

இவற்றினை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றன. 

இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன். அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.

நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இவ் காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் காணப்படும் என்பதனை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் புதிதாக ஓர் காணியை இராணுவம் தன்வசப்படுத்த திட்டம் சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்  மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி, அதில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனை  நீங்கள் துரிதப்படுத்தி தரவேண்டும்.அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம். அதேபோல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அவ் ஊர் மக்கள் மலசல கூடம் அமைப்பதற்காக கேட்கின்றார்கள்.இவற்றினை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றன. இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன். அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இவ் காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் காணப்படும் என்பதனை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement