• Nov 19 2024

ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் கைது! அநாவசியமாக வெளியில் நடமாடத் தடை! தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

Chithra / Sep 19th 2024, 11:29 am
image


வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள். 

அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னர் ஆரம்பமாகும்.

பிரதான வாக்கு எண்ணும் செயற்பாடுகள் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்ததார்.

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்து வருதல், புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், ஆயுதங்களை எடுத்து வருதல், மது அருந்திவிட்டு வருதல் போன்ற விடயங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்ததார். 

வாக்கு சீட்டுகளை புகைப்படம் எடுத்தலும், அவற்றை காட்சிப்படுத்துதலும், தாம் வாக்களித்த வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு சகல தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கபட்டுள்ள வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் இன்று (19) நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும். 

அவ்வாறு நீக்காவிட்டால் பொலிஸாரை கொண்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.



ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் கைது அநாவசியமாக வெளியில் நடமாடத் தடை தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள். அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னர் ஆரம்பமாகும்.பிரதான வாக்கு எண்ணும் செயற்பாடுகள் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்ததார்.மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்து வருதல், புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், ஆயுதங்களை எடுத்து வருதல், மது அருந்திவிட்டு வருதல் போன்ற விடயங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்ததார். வாக்கு சீட்டுகளை புகைப்படம் எடுத்தலும், அவற்றை காட்சிப்படுத்துதலும், தாம் வாக்களித்த வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.அத்தோடு சகல தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கபட்டுள்ள வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் இன்று (19) நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டால் பொலிஸாரை கொண்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement