• Nov 15 2025

ஐஸ் போதைப் பொருளுடன் கைது!

shanuja / Nov 14th 2025, 9:11 pm
image


மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (14) மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக இவ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது மூதூர் -ஆலிம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போது 27 வயதுடைய நபர் ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள்,கையடக்க தொலைபேசி 01, சிறிய தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


மூதூர் நகரில் வைத்து ஐஸ் விற்பனை செய்ய தயாராக இருந்த தோப்பூர் -அல்லைநகரைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இவ் சுற்றி வளைப்பில் தோப்பூர் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.


கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

ஐஸ் போதைப் பொருளுடன் கைது மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (14) மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக இவ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இதன்போது மூதூர் -ஆலிம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போது 27 வயதுடைய நபர் ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள்,கையடக்க தொலைபேசி 01, சிறிய தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.மூதூர் நகரில் வைத்து ஐஸ் விற்பனை செய்ய தயாராக இருந்த தோப்பூர் -அல்லைநகரைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இவ் சுற்றி வளைப்பில் தோப்பூர் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement