• Apr 04 2025

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு

Thansita / Apr 3rd 2025, 8:18 pm
image

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் மட்டக்களப்பு  நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தன்ர

இந் நிலையில் அந்த வர்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடி 70 இலச்சம் ரூபா பணத்தை பெற்று அதற்கான வர்தக நடவடிக்கை இடம்பெறமால்  நிதியை  மோசடி  செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள சிஜடி நிதி மோசடி பிரிவினரிடம் முறப்பாடு செய்துள்ளார்

இதனையடுத்து குறித்த  முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் பாசிக்குடாவில் தனியர் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த வந்த  சிஜடி நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து 

அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமேகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்குஇ வர்த்தம் தொடர்பானது இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்தார்

இதனடிப்படையில் நீதவான் அவரை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறமதியான இரண்டு பேர் கொண்ட சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம்  8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.  


நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் மட்டக்களப்பு  நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுமட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தன்ரஇந் நிலையில் அந்த வர்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடி 70 இலச்சம் ரூபா பணத்தை பெற்று அதற்கான வர்தக நடவடிக்கை இடம்பெறமால்  நிதியை  மோசடி  செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள சிஜடி நிதி மோசடி பிரிவினரிடம் முறப்பாடு செய்துள்ளார்இதனையடுத்து குறித்த  முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் பாசிக்குடாவில் தனியர் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த வந்த  சிஜடி நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமேகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்குஇ வர்த்தம் தொடர்பானது இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்தார்இதனடிப்படையில் நீதவான் அவரை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறமதியான இரண்டு பேர் கொண்ட சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம்  8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.  

Advertisement

Advertisement

Advertisement