• Feb 12 2025

இலங்கையை மீட்டெடுத்த அசலங்கவின் சதம்!

Tharmini / Feb 12th 2025, 4:47 pm
image

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தற்சமயம் நடைபெற்ற வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க சதம் விளாசியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்யும் நான்காவது சதம் இதுவாகும். மொத்தமாக இப் போட்டியில் அவர் 126 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை அணித் தலைவரின் நான்காவது சதமானது ஆட்டத்தில் அணியை மீட்டெடுத்தது. இதனால், இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.

அசலங்கவுக்கு அடுத்த படியாக சகலதுறை வீரர் துனித் வெல்லலகே 30 ஓட்டங்களை பெற்றார். அணியின் ஏனைய வீரர்கள் டக்கவுட்டுடனும், சொப்ப ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணியின் வேகத் தாக்குதலினால் 55 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகெடுத்து தடுமாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 215 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கையை மீட்டெடுத்த அசலங்கவின் சதம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தற்சமயம் நடைபெற்ற வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க சதம் விளாசியுள்ளார்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்யும் நான்காவது சதம் இதுவாகும். மொத்தமாக இப் போட்டியில் அவர் 126 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களை குவித்தார்.இலங்கை அணித் தலைவரின் நான்காவது சதமானது ஆட்டத்தில் அணியை மீட்டெடுத்தது. இதனால், இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.அசலங்கவுக்கு அடுத்த படியாக சகலதுறை வீரர் துனித் வெல்லலகே 30 ஓட்டங்களை பெற்றார். அணியின் ஏனைய வீரர்கள் டக்கவுட்டுடனும், சொப்ப ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.ஒரு கட்டத்தில் இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணியின் வேகத் தாக்குதலினால் 55 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகெடுத்து தடுமாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 215 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement