• May 02 2024

8-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் அடித்த அஸ்வின்!!

crownson / Dec 16th 2022, 6:53 am
image

Advertisement

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர்இந்திய அணி 293/7 என்ற நிலையில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பேட்டிங் செய்தனர் .

வழக்கமாக இந்திய அணியின் கடைசி 4/ 5 விக்கெட்டுகள் , 10/ 20 ரன்களிலேயே அவுட் ஆகிவிடுவார்கள்.

ஆனால் 8-ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் 92 ரன்கள் சேர்ந்து அடித்தனர் .

இவர்களின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 400 ரன்களை எட்ட முடிந்தது.

அஸ்வின் 58 ரன்கள், குல்தீப் யாதவ் 40 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்கள்.

அஸ்வின் சீக்கிரமே 3000 ரன்களை எட்ட போகிறார் .

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் கபில் தேவிற்கு பிறகு 3000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்த 2-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார் .

இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் அடித்துள்ளது .

புஜாரா 90 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்கள் , அஸ்வின் 58 ரன்கள், குல்தீப் யாதவ் 40 ரன்கள் அடித்தனர் .

மெஹ்தி ஹசன், டஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் அஸ்வின்,அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் கையில் தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உள்ளது

8-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் அடித்த அஸ்வின் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர்இந்திய அணி 293/7 என்ற நிலையில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பேட்டிங் செய்தனர் . வழக்கமாக இந்திய அணியின் கடைசி 4/ 5 விக்கெட்டுகள் , 10/ 20 ரன்களிலேயே அவுட் ஆகிவிடுவார்கள்.ஆனால் 8-ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் 92 ரன்கள் சேர்ந்து அடித்தனர் . இவர்களின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 400 ரன்களை எட்ட முடிந்தது.அஸ்வின் 58 ரன்கள், குல்தீப் யாதவ் 40 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்கள். அஸ்வின் சீக்கிரமே 3000 ரன்களை எட்ட போகிறார் . இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் கபில் தேவிற்கு பிறகு 3000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்த 2-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார் .இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் அடித்துள்ளது . புஜாரா 90 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்கள் , அஸ்வின் 58 ரன்கள், குல்தீப் யாதவ் 40 ரன்கள் அடித்தனர் . மெஹ்தி ஹசன், டஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் அஸ்வின்,அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் கையில் தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உள்ளது

Advertisement

Advertisement

Advertisement