36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 இல், திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட MBM. அஸாம் தடகளப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த நவம்பர் 01ஆம் திகதி தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டிகளில், 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற திறமையான வீரர்களுக்கு மத்தியில் அகில இலங்கை மட்டத்தில் இவ்விரு பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸாமின் இச்சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த அஸாம் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 இல், திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட MBM. அஸாம் தடகளப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.கடந்த நவம்பர் 01ஆம் திகதி தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டிகளில், 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற திறமையான வீரர்களுக்கு மத்தியில் அகில இலங்கை மட்டத்தில் இவ்விரு பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.அஸாமின் இச்சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.