அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இச் சம்பவம் நேற்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.
உதவி தோட்ட முகாமையாளர் தனது உத்தியோகபூர்வ தோட்ட பங்களாவில் மரக்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாகவும், தற்போது இரண்டு அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம்(02) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.
தோட்டத்தில் கஞ்சா செய்கை; உதவி முகாமையாளர் கைது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.இச் சம்பவம் நேற்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.உதவி தோட்ட முகாமையாளர் தனது உத்தியோகபூர்வ தோட்ட பங்களாவில் மரக்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாகவும், தற்போது இரண்டு அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம்(02) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.