• May 17 2024

நாசவேலை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுக்கள் முயற்சி..!ருவான் குற்றச்சாட்டு..!samugammedia

Sharmi / Jun 15th 2023, 9:51 am
image

Advertisement

நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுக்கள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மத்திய பலமன்ற கூட்டத்தில் உரையாற்றிய ருவான் விஜேவர்தன,

அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் உள்ளனர். “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் ஆகியோருக்கு பிரதமர் பதவியை வழங்க அழைப்பு விடுத்த வேளை அனைவரும் மறுத்துவிட்டனர்.

இதனால் ஐ.தே.க தலைவர் பிரதமர் பதவியை ஏற்க வேண்டியிருந்தது. அவர் தேசத்திற்கு ஒருவித ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தார். ஆனால், இன்று நாசவேலை மூலம் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சில குழுக்கள் முயற்சித்து வருகின்றன என்றார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறுகையில்,

நாடு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில் இனவாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். “2002ல் நாடு ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்லும் போது அவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். 2019 இல் நாடு மீண்டும் ஸ்திரத்தன்மையைப் பெற்றபோது அவர்கள் அதையே செய்தனர். இன்றும் அவ்வாறே நடப்பதைக் காண்கிறோம். இந்த குழுக்களை அகற்ற வேண்டும்,'' என்றார்.

நாசவேலை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுக்கள் முயற்சி.ருவான் குற்றச்சாட்டு.samugammedia நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுக்கள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மத்திய பலமன்ற கூட்டத்தில் உரையாற்றிய ருவான் விஜேவர்தன, அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் உள்ளனர். “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது ஜனாதிபதியாக பதவியேற்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் ஆகியோருக்கு பிரதமர் பதவியை வழங்க அழைப்பு விடுத்த வேளை அனைவரும் மறுத்துவிட்டனர்.இதனால் ஐ.தே.க தலைவர் பிரதமர் பதவியை ஏற்க வேண்டியிருந்தது. அவர் தேசத்திற்கு ஒருவித ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தார். ஆனால், இன்று நாசவேலை மூலம் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சில குழுக்கள் முயற்சித்து வருகின்றன என்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறுகையில், நாடு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில் இனவாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். “2002ல் நாடு ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்லும் போது அவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். 2019 இல் நாடு மீண்டும் ஸ்திரத்தன்மையைப் பெற்றபோது அவர்கள் அதையே செய்தனர். இன்றும் அவ்வாறே நடப்பதைக் காண்கிறோம். இந்த குழுக்களை அகற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement

Advertisement

Advertisement