• May 17 2024

மக்களே அவதானம்...! பல பகுதிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Oct 7th 2023, 11:44 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை அடுத்து பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய பிரதேசங்களுக்கே இந்த மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பகுதிக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது மாடி மண்சரிவு அபாய அறிவிப்பு பல பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங், களு, நில்வலா மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹாகொட, அதுரலிய, அக்குரஸ்ஸ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறான வெள்ள நிலைமைகளில் இருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் அவ்வழியாக செல்லும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மக்களே அவதானம். பல பகுதிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை அடுத்து பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.அந்தவகையில் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய பிரதேசங்களுக்கே இந்த மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பகுதிக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இரண்டாவது மாடி மண்சரிவு அபாய அறிவிப்பு பல பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.இதேவேளை, தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங், களு, நில்வலா மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹாகொட, அதுரலிய, அக்குரஸ்ஸ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.இவ்வாறான வெள்ள நிலைமைகளில் இருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் அவ்வழியாக செல்லும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement