• May 22 2024

மக்களே அவதானம்..! யாழில் போலி 'சாரதி அனுமதிப் பத்திரம்' தயாரித்த இருவர் கைது..!samugammedia

Sharmi / Jul 9th 2023, 11:43 am
image

Advertisement

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாடுகளுக்குச் செல்ல இருப்பவர்களுக்கு உடனடியாக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தரப்படும் என்று சமூக வலைத்தளங்கள் ஊடாகவிளம்பரப்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் 50 ஆயிரம் ரூபா வழங்கி சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். அந்த சாரதி அனுமதிப்பத்திரம் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டதை அடுத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாகனம் ஒன்றில் சென்று கைவிரல் அடையாளம் என்பவற்றைப் பெற்றுக் கொண்டு. போலியாக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வாகனத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களே அவதானம். யாழில் போலி 'சாரதி அனுமதிப் பத்திரம்' தயாரித்த இருவர் கைது.samugammedia போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வெளிநாடுகளுக்குச் செல்ல இருப்பவர்களுக்கு உடனடியாக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தரப்படும் என்று சமூக வலைத்தளங்கள் ஊடாகவிளம்பரப்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் 50 ஆயிரம் ரூபா வழங்கி சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். அந்த சாரதி அனுமதிப்பத்திரம் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டதை அடுத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாகனம் ஒன்றில் சென்று கைவிரல் அடையாளம் என்பவற்றைப் பெற்றுக் கொண்டு. போலியாக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வாகனத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேவேளை சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement