• Apr 19 2024

சிக்கன நடவடிக்கை - கழிவறை டிஷ்யூ பேப்பர்களை கொண்டு செல்லும் டுவிட்டர் பணியாளர்கள்

Chithra / Jan 4th 2023, 6:01 pm
image

Advertisement

உலக கோடீசுவரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சமீபத்தில் சென்றார் எலான் மஸ்க். கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நிறுவனங்கள் இரண்டாண்டுகளாக முடங்கிய சூழலில், மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பல சிக்கன நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். கடந்த அக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் மஸ்க்.

இதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழலில், நிறுவனத்தில் பணியாற்ற கூடிய, கட்டிடங்களை தூய்மை செய்து, பராமரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலர் சான்பிரான்சிஸ்கோ நகரில், தங்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர்களை வேலையை விட்டு நீக்கும் உத்தரவை மஸ்க் எடுத்துள்ளார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், நிறுவன பணியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.

டுவிட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தில் காவல் பணி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடாத நிலையில், அழுக்கடைந்த கழிவறைகள், தூய்மையற்ற பணி சூழல் காணப்படுகிறது.

சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டு, கீழே போடும் குப்பைகள், மீதமுள்ள உணவுகள் மற்றும் வியர்வை நாற்றம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

எலான் மஸ்க்கின் மற்றொரு நடவடிக்கையாக சான்பிரான்சிஸ்கோ நிறுவன அலுவலகத்தில் 4 தளங்களை மூடும்படியும், மீதமுள்ள 2 தளங்களில் ஊழியர்கள் பணிபுரியும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல், நியூயார்க் அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் மஸ்க் வேலையில் இருந்து தூக்கி உள்ளார். எனினும், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகையை டுவிட்டர் நிறுவனம் செலுத்த தவறி விட்டது என்றும் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மஸ்க் கூறும்போது, 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரின் கலிபோர்னியா, சாக்ரமெண்டோ நகர தகவல் மையங்களும் அவரது நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூடப்பட்டு உள்ளன. இது டுவிட்டரில் செயல்பாட்டை பாதிக்கும் என பணியாளர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் சிக்கன நடவடிக்கை மிக அவசியம் என்று பதிலாக எடுத்து கூறப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

சிக்கன நடவடிக்கை - கழிவறை டிஷ்யூ பேப்பர்களை கொண்டு செல்லும் டுவிட்டர் பணியாளர்கள் உலக கோடீசுவரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சமீபத்தில் சென்றார் எலான் மஸ்க். கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நிறுவனங்கள் இரண்டாண்டுகளாக முடங்கிய சூழலில், மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன.இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பல சிக்கன நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். கடந்த அக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் மஸ்க்.இதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த சூழலில், நிறுவனத்தில் பணியாற்ற கூடிய, கட்டிடங்களை தூய்மை செய்து, பராமரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலர் சான்பிரான்சிஸ்கோ நகரில், தங்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து, அவர்களை வேலையை விட்டு நீக்கும் உத்தரவை மஸ்க் எடுத்துள்ளார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், நிறுவன பணியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.டுவிட்டரில் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக, நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும்போது, தங்களுடன் கழிவறைக்கு செல்வதற்கு தேவையான டிஷ்யூ பேப்பரையும் உடன் கொண்டு செல்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.டுவிட்டர் நிறுவனத்தில் காவல் பணி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடாத நிலையில், அழுக்கடைந்த கழிவறைகள், தூய்மையற்ற பணி சூழல் காணப்படுகிறது.சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டு, கீழே போடும் குப்பைகள், மீதமுள்ள உணவுகள் மற்றும் வியர்வை நாற்றம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.எலான் மஸ்க்கின் மற்றொரு நடவடிக்கையாக சான்பிரான்சிஸ்கோ நிறுவன அலுவலகத்தில் 4 தளங்களை மூடும்படியும், மீதமுள்ள 2 தளங்களில் ஊழியர்கள் பணிபுரியும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதேபோல், நியூயார்க் அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் மஸ்க் வேலையில் இருந்து தூக்கி உள்ளார். எனினும், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அலுவலகத்திற்கான வாடகையை டுவிட்டர் நிறுவனம் செலுத்த தவறி விட்டது என்றும் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்து உள்ளது.இதுபற்றி மஸ்க் கூறும்போது, 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறையை தவிர்க்கவே இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.டுவிட்டரின் கலிபோர்னியா, சாக்ரமெண்டோ நகர தகவல் மையங்களும் அவரது நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூடப்பட்டு உள்ளன. இது டுவிட்டரில் செயல்பாட்டை பாதிக்கும் என பணியாளர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் சிக்கன நடவடிக்கை மிக அவசியம் என்று பதிலாக எடுத்து கூறப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement