• Mar 02 2025

மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Tharmini / Mar 1st 2025, 4:45 pm
image

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அதன் பின், இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் செதிக்குல்லா அடல் ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான், 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரஹ்மத் ஷா 12 ரன்கள், ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நேர்த்தியாக விளையாடிய செதிக்குல்லா அடல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 95 பந்துகளில் 85 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், களமிறங்கிய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் அவுஸ்திரேலிய பந்துவீச்சில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் 19 ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 273 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அவுஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. மேத்யூ ஷார்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டுடன் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். டிராவிஸ் ஹெட் கொடுத்த எளிய பிடியை ரஷித் கான் தவறவிட்டார். அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட டிராவிஸ் ஹெட் பவுண்டரிகளை விரட்டினார்.

அவுஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 109 ஓட்டங்கள் எடுத்திருக்கையில் மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் 59 ஓட்டங்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய ஆட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு புள்ளியையும் சேர்த்து 4 புள்ளிகள் பெற்ற அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறலாம். அரையிறுதிக்கு தகுதி பெற அந்த அணிக்கு மிக மிக அரிதான வாய்ப்பே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் விளையாடியது.ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.அதன் பின், இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் செதிக்குல்லா அடல் ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான், 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரஹ்மத் ஷா 12 ரன்கள், ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நேர்த்தியாக விளையாடிய செதிக்குல்லா அடல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 95 பந்துகளில் 85 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.அதன் பின், களமிறங்கிய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் அவுஸ்திரேலிய பந்துவீச்சில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் 19 ஓட்டங்களை எடுத்தார்.இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 273 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அவுஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. மேத்யூ ஷார்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டுடன் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். டிராவிஸ் ஹெட் கொடுத்த எளிய பிடியை ரஷித் கான் தவறவிட்டார். அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட டிராவிஸ் ஹெட் பவுண்டரிகளை விரட்டினார்.அவுஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 109 ஓட்டங்கள் எடுத்திருக்கையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் 59 ஓட்டங்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்றைய ஆட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு புள்ளியையும் சேர்த்து 4 புள்ளிகள் பெற்ற அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறலாம். அரையிறுதிக்கு தகுதி பெற அந்த அணிக்கு மிக மிக அரிதான வாய்ப்பே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement