இளைஞர்களுக்கு டிஜிட்டல் பாதைகள் பற்றிய விழிப்புணர்வு நடை பவணியும் வீதி நாடகமும் இன்று(31) மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்றது.
உலக வாலிபர் தினத்தையொட்டி , அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முறக்கொட்டாஞ்சேனை பரிபவுல் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இளைஞர்களே டிஜிட்டல் பாதைகள் தொடர்பில் அறிந்திருங்கள் எனும் தொனிப்பொருளில், முறக்கொட்டாஞ்சேனை - அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முன் ஆரம்பமான பேரினி சித்தாண்டி பிரதான வீதி வழியாக சென்று பொதுச் சந்தையை அடைந்து அங்கிருந்து மீண்டும் சித்தாண்டி சந்தியை வந்தடைந்தது.
பேரணியைத் தொடர்ந்து சித்தாண்டி சந்தியில் விழிப்புணர்வு நாடகமும் ஆலய வாலிபர்களால் நிகழ்த்தப்பட்டது.
அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலைய முறக்கொட்டாஞ்சேனை பரி.பவுல் ஆலயத்தின் இயக்குநர் அருட்பணி நேசராஜா சபிலாஷ் , அதன் முகாமையாளர் பிரதீபா மரியஸ் டெனிஸ்லஸ், இளைஞர் பிரதேச மன்ற பிரதேச சம்மேளன தலைவர் இ.கிசோக், பிரசன்னா , புனித பவுலின் ஆலய மூப்பர் திருமதி யூட் ஹேமா , ஞான ஒளி விளையாட்டுக்கழக தலைவர் சி.பிரதீபன் உள்ளிட்டோருடன், தேவாலய வாலிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வை த.அருள்நேசன் , ஜே.ஷலோம்மீகா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி. இளைஞர்களுக்கு டிஜிட்டல் பாதைகள் பற்றிய விழிப்புணர்வு நடை பவணியும் வீதி நாடகமும் இன்று(31) மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்றது.உலக வாலிபர் தினத்தையொட்டி , அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முறக்கொட்டாஞ்சேனை பரிபவுல் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இளைஞர்களே டிஜிட்டல் பாதைகள் தொடர்பில் அறிந்திருங்கள் எனும் தொனிப்பொருளில், முறக்கொட்டாஞ்சேனை - அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முன் ஆரம்பமான பேரினி சித்தாண்டி பிரதான வீதி வழியாக சென்று பொதுச் சந்தையை அடைந்து அங்கிருந்து மீண்டும் சித்தாண்டி சந்தியை வந்தடைந்தது.பேரணியைத் தொடர்ந்து சித்தாண்டி சந்தியில் விழிப்புணர்வு நாடகமும் ஆலய வாலிபர்களால் நிகழ்த்தப்பட்டது.அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலைய முறக்கொட்டாஞ்சேனை பரி.பவுல் ஆலயத்தின் இயக்குநர் அருட்பணி நேசராஜா சபிலாஷ் , அதன் முகாமையாளர் பிரதீபா மரியஸ் டெனிஸ்லஸ், இளைஞர் பிரதேச மன்ற பிரதேச சம்மேளன தலைவர் இ.கிசோக், பிரசன்னா , புனித பவுலின் ஆலய மூப்பர் திருமதி யூட் ஹேமா , ஞான ஒளி விளையாட்டுக்கழக தலைவர் சி.பிரதீபன் உள்ளிட்டோருடன், தேவாலய வாலிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந் நிகழ்வை த.அருள்நேசன் , ஜே.ஷலோம்மீகா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.