• May 08 2024

தாய்க்கு அஞ்சி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்..! கொழும்பில் பரபரப்புச் சம்பவம் samugammedia

Chithra / Nov 14th 2023, 9:20 am
image

Advertisement

 

பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போதுஇ ​​அவரது தாய் வந்துவிட்டதால் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன், தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

அப்போது மாணவனின் தாயார் திடீரென வீட்டுக்கு வந்தபோது அவர்கள் தலைமறைவாக முயன்றதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்த மாணவன் சுவர் உதவியால் கீழே இறங்க முயன்றபோது மூன்றாவது மாடிக்கு அருகில் கீழே விழுந்துள்ளார். 

கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்க்கு அஞ்சி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன். கொழும்பில் பரபரப்புச் சம்பவம் samugammedia  பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போதுஇ ​​அவரது தாய் வந்துவிட்டதால் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன், தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மாணவனின் தாயார் திடீரென வீட்டுக்கு வந்தபோது அவர்கள் தலைமறைவாக முயன்றதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்த மாணவன் சுவர் உதவியால் கீழே இறங்க முயன்றபோது மூன்றாவது மாடிக்கு அருகில் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement