• May 22 2024

தலவாக்கலையில் பயங்கரம்: குழுமோதலில் ஒருவர் உயிரிழப்பு..! samugammedia

Chithra / Nov 14th 2023, 9:49 am
image

Advertisement

 

தலவாக்கலையில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த 22 வயதான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தலவாக்கலையில் பயங்கரம்: குழுமோதலில் ஒருவர் உயிரிழப்பு. samugammedia  தலவாக்கலையில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் படுகாயமடைந்த 22 வயதான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement