• Jun 22 2024

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவிற்கு தடை உத்தரவு! samugammedia

Tamil nila / Aug 24th 2023, 5:04 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தொடர்பில் அவதூறாக கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு கீழ் செயற்படும் அனைவருக்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வுக்கு அமைய, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய விசேட கணக்காய்வு வரைவு  ஊடகங்கள் ஊடாக வௌிப்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள், பொய்யானவை மற்றும் அவதூறானவை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவிற்கு தடை உத்தரவு samugammedia ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தொடர்பில் அவதூறாக கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு கீழ் செயற்படும் அனைவருக்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வுக்கு அமைய, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய விசேட கணக்காய்வு வரைவு  ஊடகங்கள் ஊடாக வௌிப்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள், பொய்யானவை மற்றும் அவதூறானவை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement