• Jun 28 2024

யாழ் போதனா வைத்தியசாலையில்125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சை!

Tamil nila / Jun 21st 2024, 10:01 pm
image

Advertisement

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டது.

அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் 51  இராணுவ படைப்பிரிவின் உதவியுடன் குறித்த கண் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் பொசன் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




யாழ் போதனா வைத்தியசாலையில்125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சை பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டது.அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் 51  இராணுவ படைப்பிரிவின் உதவியுடன் குறித்த கண் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் பொசன் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement