• Apr 28 2024

'ஐ போன்' பயன்படுத்துவதற்கு தடை! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு SamugamMedia

Chithra / Mar 21st 2023, 4:29 pm
image

Advertisement

ரஷ்யாவில் வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஐ போன்கள் பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிபர் நிர்வாக துறையிடம் இருந்து இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிய வருகின்றது. 


அத்துடன், அரசு தொடர்பான விவகாரங்களாக இருப்பினும் ஸ்மார்ட்  போன் பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

ஸ்மார்ட்  போன் மற்றும் ஐ போனினை பயன்படுத்தினால் அவற்றின் மூலம் மேற்கத்தைய நாடுகள் உளவு பார்க்கும் வாய்ப்புள்ளதால் அதற்கு பதிலாக ரகசியமாக வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது ரஷ்ய அரசாங்கம். 


இணைய சேவைகளை பயன்படுத்துவதில் ஓவர் அட்டிவ் நபராக வலம் வரும் ரஷ்ய அதிபர் புடின் ஸ்மார்ட்  போன் பயன்டுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஐ போன்' பயன்படுத்துவதற்கு தடை பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு SamugamMedia ரஷ்யாவில் வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஐ போன்கள் பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிபர் நிர்வாக துறையிடம் இருந்து இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன், அரசு தொடர்பான விவகாரங்களாக இருப்பினும் ஸ்மார்ட்  போன் பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்மார்ட்  போன் மற்றும் ஐ போனினை பயன்படுத்தினால் அவற்றின் மூலம் மேற்கத்தைய நாடுகள் உளவு பார்க்கும் வாய்ப்புள்ளதால் அதற்கு பதிலாக ரகசியமாக வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது ரஷ்ய அரசாங்கம். இணைய சேவைகளை பயன்படுத்துவதில் ஓவர் அட்டிவ் நபராக வலம் வரும் ரஷ்ய அதிபர் புடின் ஸ்மார்ட்  போன் பயன்டுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement