• Oct 11 2024

கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில் ராஜபக்ச..!

Chithra / Mar 19th 2024, 3:28 pm
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எழுதிய நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை, வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். 

மேலும், என்னிடம் அந்த நூல் இல்லை. கோட்டாபய அந்த நூலின் பிரதியை எனக்கு வழங்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு அந்த நூலின் டிஜிட்டல் பிரதியையும் எனக்கு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நூலை பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் கோட்டபய நூல் ஒன்றை எழுதவுள்ளார் அதற்கான விபரங்களை சேகரிக்கின்றார் என அறிந்தேன்.

நாமல் கூட புத்தககடையொன்றிலேயே அந்த நூலை வாங்கியுள்ளார். கோட்டாபயவிடமிருந்து அந்த நூல் எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை.

எங்கள் குடும்பத்தில் எந்த புரிந்துணர்வு இன்மையும் இல்லை. அவர்கள் அந்த நூலை எனக்கு வழங்காதது ஒரு பிரச்சினையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில் ராஜபக்ச.  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எழுதிய நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை, வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். மேலும், என்னிடம் அந்த நூல் இல்லை. கோட்டாபய அந்த நூலின் பிரதியை எனக்கு வழங்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு அந்த நூலின் டிஜிட்டல் பிரதியையும் எனக்கு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அந்த நூலை பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் கோட்டபய நூல் ஒன்றை எழுதவுள்ளார் அதற்கான விபரங்களை சேகரிக்கின்றார் என அறிந்தேன்.நாமல் கூட புத்தககடையொன்றிலேயே அந்த நூலை வாங்கியுள்ளார். கோட்டாபயவிடமிருந்து அந்த நூல் எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை.எங்கள் குடும்பத்தில் எந்த புரிந்துணர்வு இன்மையும் இல்லை. அவர்கள் அந்த நூலை எனக்கு வழங்காதது ஒரு பிரச்சினையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement